1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (16:31 IST)

கேரள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ திலீப்பிடம்? - அதிர்ச்சி செய்தி

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ நடிகர் திலீப்பிடம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த பிப்ரவரி மாதம், கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு, மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது போலீசாரின் விசாரணை பிடியில் இருக்கிறார்.
 
பல்சர் சுனில் என்ற நபர் மூலமாகத்தன் இந்த திட்டத்தை திலீப் அரங்கேற்றினார் எனக் கூறப்படுகிறது. பல்சர் சுனிலும் தற்போது சிறையில் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், அந்த நடிகை காரில் கடத்தப்பட்டு, பல்சுனில் சுனில் மற்றும் சிலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட போது, அதை அந்த கும்பல் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின் அந்த வீடியோ திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அதாவது, பல்சர் சுனில் கும்பலுக்கு தர வேண்டிய பணத்தை, சுனில் தரப்பு தராமல் போனதால்தான் இந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளதாகவும் போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 
 
திலீப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறாரக்ள். நடிகை கடத்தல் வழக்கில் நாளுக்கு நாள் வெளிவரும் செய்திகள், மலையாள சினிமா உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.