கற்பழிக்க முயன்ற கொடூரனின் நாக்கை கடித்து துண்டாக்கி போலீசில் கொடுத்த இளம்பெண்!
கற்பழிக்க முயன்ற கொடூரனின் நாக்கை கடித்து துண்டாக்கி போலீசில் கொடுத்த இளம்பெண்!
கடந்த சில வாராங்களுக்கு முன்னர் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சாமியார் ஒருவரின் ஆணுறுப்பை இளம்பெண் ஒருவர் துண்டாக்கிய சம்பவம் கேரளாவில் நடைபெற்றது. அதே போல கொஞ்சம் வித்தியாசமான சம்பவம் மீண்டும் அங்கே நடந்துள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் இளம்பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கி அதனுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த அன்று அந்த இளம்பெண் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டை சேர்ந்த 30 வயதான ராகேஷ் என்பவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அந்த நபரிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்த இளம்பெண் அவனது நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார். பின்னர் அந்த நாக்குடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் நாக்கு அறுபட்ட ராகேஷ் எங்கேயாவது மருத்துவமனையில் இருப்பான் என ஒவ்வொரு மருத்துவமனையாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ராகேஷை கண்டுபிடித்த போலீசார் சிகிச்சை முடிந்த பின்னர் கைது செய்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.