காதலன் கண் முன்னாலேயே பெண்ணை கற்பழித்த மூன்று பேர்


Murugan| Last Updated: புதன், 23 செப்டம்பர் 2015 (19:56 IST)
மாகாராஷ்டிராவில், காதலுடன் தனிமையில் இருந்த ஒரு பெண்ணை மூன்று பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பெண், அவரது காதலருடன் தீஸ்காவ்ன் ஷிவாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றிருக்கிறார். அப்போது அவர்களை பார்த்த மூன்று பேர், ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் அந்தப்பெண்ணின்  காதலரை பிடித்து அடித்துள்ளனர். 
 
அதோடு விடாமல், அவரின் கண் முன்பு அந்த 3 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண்ணும், அவரது காதலரும் உதவி கேட்டு அலறியும் யாரும் அங்கு வரவில்லை. 
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் அந்தப் பெண்ணையும், அவரது காதலரையும் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலிசார் வருவதற்குள் அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
 
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :