வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 11 மார்ச் 2015 (11:48 IST)

”காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்டாக செயல்பட்டார்” - சொல்கிறார் மார்கண்டேய கட்ஜு

காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று மார்கண்டேய கட்ஜு தனது வலைப் பக்கத்தில் [Blogspot] எழுதியுள்ளார்.
 
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ இது குறித்து தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார்.
 

 
மேலும் அதில், “இந்த பதிவு எனக்கு நிறைய எதிர்ப்புகளை கொடுக்கும். ஆனால் அது ஒரு பெரிய விஷயமே இலை. நான் புகழை எதிர்பார்ப்பவன் அல்ல. நான் அடிக்கடி இது போன்ற விஷயங்களை கூறுவதால் எனக்கு மிகவும் செல்வாக்கற்ற நிலை ஏற்படும் என எனக்கு தெரியும்.
 
மேலும் நான் பலராலும் கண்டனத்திற்கும் தூற்றுதலுக்கும் ஆளாவேன். இருப்பினும் நான் இது போன்ற வார்த்தைகளை கூறி வருகிறேன். அவர்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவன் என்று சொல்வார்கள் என நான் நம்புகிறேன். காந்தி பாரபட்சமற்ற வகையில் ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டாக இருந்தார் என நான் சமர்பிக்கிறேன்.
 

 
இப்படி சொல்வதற்கு இவை தான் காரணங்கள்:
 
1. இந்தியா எண்ணற்ற மதங்களாலும், சாதிகளாலும், இனங்களாலும், மொழிகளாலும் மிகப்பெரிய அளவில் பிரிந்து கிடக்கிறது. இதனை புரிந்துகொண்ட பிரிட்டானிய அரசு பிரித்தாலும் சூழ்ச்சியைப் பயண்படுத்தியது [பார்க்க: see online ' History in the Service of Imperialism ' , which is a speech delivered by Prof. B.N. Pande in the Rajya Sabha] தொடர்ந்து பல சகாப்தங்களாக அரசியலில் மதத்தை புகுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியையை பயண்படுத்திய பிரிட்டானிய அரசின் கொள்கையை அதிகப்படுத்தினார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

1915ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது முதல் 1948ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையில் அவரது பொது கூட்டங்களில் பேசியபோதும், எழுதியபோதும் அவர் இந்துமதக் கருத்துக்களை வலியுறுத்தி வந்துள்ளதை நீங்கள் அவற்றை படிக்கும்போது அறிய முடியும்.
 
காந்தி 10.6.1921ஆம் ஆண்டு அவர் எழுதியுள்ள ’இளம் இந்தியா’ [Young India] புத்தகத்தில் ‘நான் ஒரு சநாதன ஹிந்து. நான் வருணசிரம தர்மத்தில் நம்பிக்கை உடையவன். நான் பசு பாதுகாப்பின் மீது நம்பிக்கை உடையவன்” என்று குறிப்பிட்டுள்ளார். பொதுக்கூட்டங்களில் “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற இந்து மத வழிபாட்டு பாடலை பாடியுள்ளார்.
 
2. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனுஷிலன் சமிதி, ஜுஹந்தர் மற்றும் புரட்சிவாதிகளான சூர்யா சென், ராம்பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர் ஆசாத், அஷ்பகுல்லா, பகத்சிங், ராஜகுரு இன்னும் இதுபோன்ற மற்றவர்களால் புரட்சிகர இயக்கங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தன.
 
ஆனால் காந்தி, இவர்களுடை புரட்சிகர கண்ணோட்டத்திலிருந்து வரவிருந்த சுதந்திரப் போராட்டத்தை, பிரிட்டிஷ் அரசுக்கு தீங்கிழைக்காத, முட்டாள் தனமான ‘சத்தியாகிரகம்’ எனும் தடத்தின் மூலம் வெற்றிகரமாக அதை முறியடித்தார். இதுவும் பிரிட்டிஷ் நலனுக்குதான் பணியாற்றியது.
 
இவையெல்லாம், முஸ்லிம்களை ‘முஸ்லிம் லீக்’ போன்ற முஸ்லிம் அமைப்புகளை நாடச் செய்தன. இது, வெள்ளையர்களின் ‘பிரித்தாளும் கொள்கை’க்கு உதவிய செயல்கள் தானே? தொடர்ந்து பல சகாப்தங்களாக அரசியலில் மதத்தை புகுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியையை பயண்படுத்திய பிரிட்டானிய அரசின் கொள்கையை அதிகப்படுத்தியதன் மூலம் காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று தெரிகிறதா இல்லையா?
 
3. காந்தியின் பொருளாதார யோசனைகள் முற்றிலும் பிற்போக்குத்தனமானது. இந்த சமூகங்கள் முற்றிலும் சாதியவாதிகள், நில உரிமையாளர்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களிடம் பிடியில் இருந்தது என்று அனைவருக்கும் தெரிந்திருந்தபோதிலும், காந்தி தன்னிறைவு பெற்ற கிராம சமூகத்திற்காக அவர் வாதிட்டார்.
 

 
காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிராக செயல்பட்டார். மேலும், கை ராட்டை மற்றும் நூல் நூற்பு மற்றும் இன்னும் பிறவற்றை போன்ற பிற்போக்கு முட்டாள்தன செயல்களை போதித்தார். இதே போல் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள் தனமானது. இது மக்களை ஏமாற்றும் செயல்.
 
இன்னும் சிலர், வகுப்புவாத வன்முறைகளின் போது காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டதை துணிச்சலான செயல் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் கேள்வி என்னவென்றால், எரியும் வீட்டை அணைக்க நினைக்கும் ஒருவர் ஏன் பல தசாப்தங்களாக பொதுக்கூட்டங்களில் மதுக்கருத்துக்களை போதிக்க வேண்டும். இதனால் மதக்கருத்துக்கள் வழியே, இந்திய மக்களை கட்டுப்படுத்த முடியும் என்றா?
 
முதலில் எரியும் வீட்டின் தீயை அணையுங்கள், பிறகு தீப்பிழம்புகளை அணைக்கப் போகும் நாடகத்தை நடத்த முயற்ச்சிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.