வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 31 மே 2017 (22:45 IST)

நாளை முதல் புதிய கட்டணங்கள் அமல்: வாடிக்கையாளர்களை அதிரச்செய்யும் எஸ்பிஐ அறிவிப்பு

ஜூன் 1 முதல் அதாவது நாளை முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இனிமேல் வங்கி கணக்கே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு இருக்கின்றது இந்த அறிவிப்பு. இதோ எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் குறித்த விபரங்கள்:




 


* வங்கிகளில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

* இலவச முறைகளுக்கு மேல் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க, தற்போது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ.,

* அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் எடுத்தால் 10 ரூபாயும், பிற ஏடிஎம்களில் எடுத்தால் 20 ரூபாயும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.

* நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 முறையும், பிற ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

* நகரங்கள் அல்லாத கணக்குகளுக்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் 10 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறை பணம் எடுக்கலாம்.

* ஜூன் 1 முதல் கணக்கின் உரிமையாளர் 10 காசோலைகளைக் கொண்ட செக் புக் வாங்க 30 ரூபாயும், 25 காசோலைகளைக் கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாயும், 50 கொண்ட புத்தகத்திற்கு 150 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

* Buddy e-wallet பயனாளர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் சேவையை 25 ரூபாய் கட்டணத்துடன் அறிமுகம் செய்துள்ளது.

* இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யூபிஐ, யூஎஸ்எஸ்டி முறைகளில் IMPS பணப் பரிமாற்றம் செய்யும் போது 1 லட்சம் ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.