ஏர் இந்தியா விமானத்தில் விரைவில் இலவச வைபை!


sivalingam| Last Modified புதன், 22 மார்ச் 2017 (04:02 IST)
ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் இலவச வைபை திட்டம் செயல்படுத்தி கொண்டு வரும் நிலையில் விரைவில் விமானத்திலும் இலவச வைபை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.. இதற்கான திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. எனவே வெகுவிரைவில் ஏர் இந்தியா  உள்ளூர் விமானங்களில் பயணிக்கும்போது மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவற்றை உபயோகிக்க முடியும். 


இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹானி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'நாங்கள் எங்கள் விமானங்களில் இலவச Wi-Fi திட்டத்தை அமல்படுத்த முனைந்து வருகிறோம். சரியாக, எப்போதில் இருந்து இந்தத் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூற முடியவில்லை என்றாலும், ஜூன் அல்லது ஜூலையில் பயணிகள் இலவச Wi-Fi வசதியைப் பெற வாய்ப்பு உள்ளது' என்று கூறியுள்ளார்.

முதல்கட்டமாக குறைந்த வேகத்தில் இலவச வைபை செயல்படும் என்றும் படிப்படியாக உயர்வேக வைபை செயல்படும் என்றும் ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :