புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (19:20 IST)

அடுத்தாண்டு ஜூன் வரை இலவச ரேஷன் பொருட்கள்: முதல்வர் அறிவிப்பு

அடுத்தாண்டு ஜூன் வரை இலவச ரேஷன் பொருட்கள்
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரதமர் மோடி அவர்களுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கும் அவ்வப்போது பனிப் போர் நடக்கும் என்பது தெரிந்ததே. இதன் அடுத்து சற்று முன்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது வரும் நவம்பர் வரை நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் 
 
இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் சற்று முன்னர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மேற்கு வங்க மாநில மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் ஏழை எளிய மக்கள் வேலைக்குச் செல்லாமல் வருமானம் இல்லாமல் இருப்பதால் ரேஷன் பொருட்களை வைத்தே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஊரடங்கு எப்பொழுதும் முடிவடையும் கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என்று தெரியாத நிலையில் குறைந்தபட்சம் ரேஷன் பொருட்களாவது அடுத்த ஆண்டு வரை கிடைக்கும் என்ற நிம்மதி மேற்கு வங்க மாநில மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது