திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam

நாலாவது முறையாக நள்ளிரவில் நடைபெறும் பாராளுமன்றம்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுவதை அடுத்து இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு சிறப்பு பாராளுமன்றம் கூடவிருக்கின்றது. இந்த நிலையில் இதற்கு முன்னர் இந்திய பாராளுமன்றம் ஏற்கனவே மூன்று முறை நள்ளிரவில் நடந்துள்ளது என்பது தெரியவருகிறது.



 
 
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்திய சுதந்திரம் அடைந்ததது. பிரிட்டீஸ் ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களிடம் வந்ததையொட்டி அன்றைய தினம் பார்லிமெண்ட்டில் நள்ளிரவு கூட்டம் நடந்தது.
 
இரண்டாவதாக சுதந்திர போராட்டத்தின் போது நடந்த வரலாற்று தினமான வெள்ளையேன வெறியேறு இயக்கத்தின் 50-ம் ஆண்டு நினைவு தின விழாவையடுத்து  கடந்த 1992-ம் ஆண்டு பார்லிமெண்ட்டில் நள்ளிரவில் கூட்டம் நடந்தது.
 
மூன்றவதாக கடந்த 1997-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் 50-ம் ஆண்டு பொன்விழா தினத்தையொட்டி பார்லிமெண்ட்டில் நள்ளிரவில் கூட்டம் நடந்தது.
 
தற்போது நான்காவது முறையாக இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஜி.எஸ்.டி. அறிமுக கூட்டம் துவங்குகிறது.