சசிகலாவை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதிக்கு நேர்ந்த சோகம்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வப்போது அவரது கட்சியினர் சென்று பார்த்து வருகின்றனர். நேற்று அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்று பார்த்தனர். விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை சந்திக்க பெங்களூர் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவைச் சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சிறை வளாகத்திற்கு சென்றனர். ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை அனுமதிக்காததால் அவர்கள் 4 மணி நேரம் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.
சசிகலாவை சந்திக்க தினந்தோறும் பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் உறுதியாக கூறிவிட்டதால் சோகத்துடன் அவர்கள் திரும்பி வந்தனர்.