1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: வியாழன், 25 மே 2023 (16:27 IST)

சிறையில் வழுக்கி விழுந்தார் முன்னாள் அமைச்சர்: மருத்துவமனையில் அனுமதி..!

டெல்லியின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மத்திய சிறை எண் 7ல் அமைந்துள்ள மருத்துவமனையின் குளியலறையில் தவறி விழுந்ததால், தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். 
 
பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் ஜெயின் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். அன்று முதல் அவர் சிறையில் உள்ளார். சிறையின் குளியலறையில் வழுக்கி  விழுந்ததில் அவருக்கு ஏற்பட்ட முதுகெலும்பு காயம் காரணமாக அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
ஜெயின் வேண்டுமென்றே டெல்லி காவல்துறையால் குறிவைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள போலீசார், ஜெயின் சிறை விதிகளின்படி தான் நடத்தப்படுவதாக கூறியுள்ளனர். 
 
இந்த நிலையில் ஜெயின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் மே 30-ம் தேதி விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva