திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2016 (11:21 IST)

இஸ்லாமிய தொலைக்காட்சியை தொடர்ந்து கிறிஸ்தவ தொலைக்காட்சிகளுக்கு தடை?

இஸ்லாமிய தொலைக்காட்சிக்கு தடை விதித்ததை தொடர்ந்து கிறிஸ்தவ தொலைக்காட்சிகளுக்கும் தடை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



 
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கை சமூக வலைதளத்தில் பின்பற்றுபவன் என வங்கதேச ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, அவருடைய பேச்சுக்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. ஜாகிர் நாயகின், “பீஸ்” தொலைக்காட்சிக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை உள்ள நிலையில், தடையை மீறி சில இடங்களில் கேபிள் டிவிக்களில் ஒளிபரப்புச் செய்தது. இதை தடுக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ”அனுமதி பெறாத தொலைக்காட்சி சேனல்களை கண்காணித்து முடக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் ஆட்சேபிக்கும் வகையிலான செய்திச் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டால் அதுகுறித்து மக்கள் புகார் அளிக்க வேண்டும்.” என்றார்.
வெங்கையா நாயுடுவின் இந்த உத்தரவால், அதிகமான புகார்கள் குவிந்திருக்கும் கிறிஸ்தவ மதச் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொலைக்காட்சிகளை மத்திய அரசு முடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.