செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (18:32 IST)

ஓட்டலில் Mouth Fresher பயன்படுத்திய 5 பேருக்கு ரத்த வாந்தி!

delhi hotel
டெல்லியில் உள்ள ஓட்டலில்  சிலர் சாப்பிட்டு முடித்த பின்பு, வாய் புத்துணர்ச்சி பெறுவதற்காக அங்கிருந்த Mouth Fresherஐ உபயோகித்தனர். இதை உபயோகித்த அடுத்த சில நிமிடங்கலில், அனைவரும் வாயில் ஏற்பட்ட எரிச்சலால்  பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லி குருகிராம் செக்டார் 90-ல்   லாஃப்போரெஸ்டா என்ற ஓட்டல் இயங்கி வருகிறது.
இந்த ஓட்டலுக்கு கடந்த மார்ச் 2 ஆம் தேதி அங்கித் குமார் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றிருக்கிறார்.
 
அங்கு அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பு, வாய் புத்துணர்ச்சி பெறுவதற்காக அங்கிருந்த Mouth Fresherஐ உபயோகித்தனர். இதை உபயோகித்த அடுத்த சில நிமிடங்கலில், அனைவரும் வாயில் ஏற்பட்ட எரிச்சலால்  பாதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெண் எரிச்சல் தாங்க முடியாமல்,  ரத்த வாந்தி எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட  ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டல்  உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.