1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 பிப்ரவரி 2023 (17:05 IST)

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் துப்பாக்கிச்சூடு ..

Nagaland
மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் மேகாலயாவின் 63 சதவீதமும் நாகலாந்தில் 73 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில், இளைஞர்கள், முதியோர், பெண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த  நிலையில், அம்மா நிலத்தின் பந்தாரி வாக்குப் பதிவு மையத்தில் நடைபெற்ற சூட்டில் தேசிய மக்கள் கட்சி ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், உமாபஸ்தி என்ற பகுதியில் உள்ள அலொக்தகி வாக்குப்பதிவு மையத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்குப் பாதுகாப்புப் பலத்தப்பட்டுள்ளது.