1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (22:09 IST)

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் தீ விபத்து

இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகத்தில் நள்ளிரவு 1.45 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல அரிய டேக்சிடெர்மிட் செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் படிமங்கள் அழிந்தது.


 
 
டெல்லி இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம், இந்திய வர்த்தக கூட்டமைப்பு கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஆறு அடுக்கு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ பற்றி, விரைவாக கட்டிடத்தின் அனைத்து மாடிகளுக்கும் தீ பரவியது.
 
தீ விபத்தில், பல அரிய டேக்சிடெர்மிட் செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் படிமங்கள் அழிந்துள்ளது.
மேலும், நான்கு மணி நேரம் தீயை கட்டுப்படுத்தப் போராடிய ஆறு தீயனைப்பு வீரர்கள், அதிக அளவில் புகையை உள்ளிழுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விபத்து எதிர்பாராதவிதமாக நடந்ததாக கூறினார். மேலும், அவரது அமைச்சகத்தின் கீழ் அனைத்து அருங்காட்சியகங்களிலும் பாதுகாப்பு தணிக்கை ஏற்படுத்த உத்தரவிட்டார்.
 
டெல்லி இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சியகம், இந்தியாவில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இரண்டு அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.