செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (17:06 IST)

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யூஜிசி பரிந்துரை!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே கல்லூரிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதியாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
 
இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யலாம் என மத்திய அரசுக்கு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்து, செமஸ்டர் இறுதியாண்டு தேர்வில் நடத்தலாமா என ஆய்வு செய்தது 
 
இந்த ஆய்வின் முடிவில் தற்போது இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் பல்கலைக்கழங்கள் ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்யப்பட்டால், முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி குறித்து முடிவெடுக்கலாம் என்றும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கல்லூரிகளில் புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்பு தொடங்க வேண்டாம் என்று யுஜிசி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு விரைவில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது