வங்கி அலுவலர்களை திருமணம் செய்ய ஃப்ட்வா கொடுத்த இஸ்லாமிய மதகுரு
கொல்கத்தாவில் வங்கியில் வேலை செய்பவர்களையோ அல்லது குடும்பத்தில் யாரேனும் வங்கி பணியில் இருந்தாலோ அவர்களுடன் திருமணம் செய்யக்கூடாது என இஸ்லாமிய மதகுரு ஃபட்வா கொடுத்துள்ளார்.
இஸ்லாமிய முறையில் ஒரு செயலை செய்யக் கூடாது என்றால் அதற்கு ஃபட்வா கொடுப்பது வழக்கம். தரூர் உலூம் தியோபந்த் என்ற மதகுரு அண்மையில் இஸ்லாமியர்களுக்கு ஃபட்வா ஒன்றை கொடுத்துள்ளார். அதில் வங்கி அலுவர்களை திருமணம் செய்ய ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
வங்கியில் அதிக வட்டி வசூலிக்கப்பட்டு அதில் இருந்து இவர்களுக்கு சம்பளம் வழங்கபடுகிறது என்று ஃபட்வா கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அப்துல் சயீத் கான், இதுபோன்ற ஃப்ட்வா கொடுப்பவர்கள் நிஜ வாழ்க்கையை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
போதுமான படிப்பறிவில்லாத, ஏழை இஸ்லாமிய மக்களை குறி வைத்தே இதுபோன்ற அறிவிப்புகள் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்திய வங்கிகள் சங்கம், இதுபோன்ற அறிவிப்புகளில் எல்லாம் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை எனினும் இதனை வன்மையான கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.