பாலியல் வல்லுறவுக்குள்ளான மகள்… கறிவிருந்து கேட்கும் ஊர்மக்கள் – தந்தையின் கையறு நிலை !
மத்திய பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்ணின் களங்கம் போகவென்றுமென்றால் ஊருக்கே கறி விருந்து வைக்க வேண்டும் என பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சியளித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண் ஒருவரை ஒரு ஆண் வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக அத்திமீறி இருக்கிறார். அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை கிராமப் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார்.
இதைக் கேட்ட கிராமப் பஞ்சாயத்தார் எடுத்த முடிவுதான் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்துள்ளது. பாலியல் வல்லுறவுக்கு ஆளானதால் அந்த பெண் களங்கமடைந்து விட்டதாகவும் அந்த களங்கத்தைப் போக்க பெண்ணின் தந்தை ஊருக்கேக் கறி விருந்து வைக்க வேண்டுமென சொல்லியுள்ளனர். இதற்கு அந்தத் தந்தை மறுக்கவே அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதையடுத்து போலிஸ் ஸ்டேஷனில் அவர் புகார் கொடுக்க அவர்களும் கண்டுகொள்ளாமல் தட்டிக் கழித்துள்ளனர். இதையடுத்து அவர் இந்த சோக சம்பவத்தை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு எடுத்து சென்றுள்ளார்.