செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (14:24 IST)

குஷ்பு மீது ஆசிட் வீச்சு: மகள் மீது தந்தையே வீசிய கொடூரம்!

குஷ்பு மீது ஆசிட் வீச்சு: மகள் மீது தந்தையே வீசிய கொடூரம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் குஷ்பு என்னும் பெண் மீது அவரது தந்தையே ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
உத்தர பிரதேசத்தில் சராய் அஸ்மாபாத் என்ற கிராமத்தில் குஷ்பு என்ற பெண் தனது கணவர், மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் கேட்டை திறக்கும் போது அவரது தந்தை மாணிக் சந்த் என்பவர் குஷ்பு மீது ஆசிட் வீசியுள்ளார்.
 
இந்த ஆசிட் வீச்சில் குஷ்புவின் கணவர், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்களுக்கு ஆக்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் கவலைக்கிடமாக இருந்த குஷ்பு மற்றும் அவரது குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
குஷ்புவின் கணவர் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது மாமனார் மாணிக் சந்தை நேற்று கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆசிட் வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.