வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (17:12 IST)

புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் - மோடி பேச்சு

டெல்லியில் வேளாண் துறை ஆராய்ச்சி கவுன்சில் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–
 
நமக்கு வாழ்வழிக்கும் விவசாயிகளின் கடின உழைப்பை பாராட்ட வேண்டும். நாட்டின் வேளாண்துறை சிறப்பான வளர்ச்சியை பெறும். விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும். இதற்காக விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் பயிரிட்டு லாபம் அடைய வேண்டும்.
 
வேளாண் விஞ்ஞானிகள் பயிர் உற்பத்தியை பெருக்குவதற்கான பணியில் ஈடுபட வேண்டும். அதே சமயத்தில் தரமானதாக இருக்க வேண்டும். தரத்தில் சமாதானம் அடையக் கூடாது. வேளாண் விஞ்ஞான ஆய்வுக் கூடங்களில் நடை பெறும் ஆராய்ச்சியும், விஞ்ஞான அறிவும் விவசாயிகளின் நிலங்களுக்கு போய் சேர வேண்டும். விவசாயிகளிடையே வேளாண்மை தகவல்களை பரப்புவதற்கு வேளாண் பல்கலைக்கழகங்கள் சார்பில் தனியாக ரேடியோ நிலையங்கள் தொடங்க வேண்டும்.
 
எண்ணை வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இறக்குமதி செலவை குறைக்க முடியும். அறிவியல் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். 
 
இவ்வாறு மோடி பேசினார்.