வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (20:19 IST)

நண்பர்களுடன் பழகிய மாடல் அழகி .. முகத்தை சிதைத்து கொன்ற காதலன்!

மகாராஷ்டிர மாநிலம்  நாக்பூரை சேர்ந்த பிரபல மாடல் அழகி  குஷ் பரிகார் (19). இவரு அஷ்ரப் சேக் என்ற இளைஞரும் மிக நெருக்கமாகப் பழகி வந்தனர். குஷ் பரிகார் தொழில் ரீதியாக சில ஆண்பர்கள் இருந்ததாகத் தெரிகிறது.
அதனால் அந்த ஆண் நண்பர்களுட்ன குஷ் பரிகார் பழகிவந்ததை, அஹ்ரப் சேக் விரும்பவில்லை.  இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி  வாக்குவாதல் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் தனது காரில் தோழி குஷியை அழைத்துக்கொண்டு சில நாட்களுக்கு முன்னர் நாக்பூர் சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தார். 
அப்போது இருவருக்கும்  இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபம் அடைந்த அஷ்ரப் ,தோழி குஷியின் முகத்தைச் சிதைத்து, அடித்து கொன்றுவிட்டார்.
 
இதனையடுத்து மக்கள் சாலையில் அடையாள தெரியாத ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
 
பின்னர் பிரேதத்தைக் கைப்பற்றி உடல்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்து,  இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிசெய்து விசாரித்தனர் .இதனையடுத்து சமூகவலைதளங்களில் உதவியால் கொலை செய்யப்பட்டவர் குஷி என்று கண்டுபிடித்தனர். 
 
இக்கொலை குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் , கொலையாளி  அஷ்ரப்பை போலீஸார் கைது செய்தார், அப்போது கூறிய வாக்குமூலத்தில் தன் தோழில் குஷ்பரிகார் ஆண்நண்பர்களுடன் பழகியதால் தனக்கு அது பிடிக்மால் அமுகம் சிதைத்துக் கொன்றதாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.