வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (07:18 IST)

பாராளுமன்ற தேர்தல் தேதி லீக் ஆனதா? அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சமூக வலைத்தளங்களில் தேர்தல் குறித்த தகவல்கள் லீக் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தல் மாநில வாரியாக நடைபெறும் தேதி குறித்த தகவல் வாட்ஸ் அப் குரூப்பில் வதந்தியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. அதில் ஏப்ரல் மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளதாகவும், மொத்தம் பத்து கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் முடிவடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தேதியும் அந்த வதந்தியில் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்த புகார் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் வெறும் வதந்தி என்றும், இந்த வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.