1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (03:21 IST)

சிவப்பழகு கிரீம் விளம்பரங்களுக்கு தடை

இந்தியாவில் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.


 

 
பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்றைய பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. விப்லாவா தாகூர், இந்தியாவில் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் “சிவப்பழகு கிரீம் விளம்பரங்கள் சமூகத்தில் இன வேற்றுமையையும், இன ஒதுக்கலையும் உருவாக்குகின்றன. இந்த விளம்பரங்கள் பெண்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிறது. இதைத்தான் நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ளதா?
 
சிவப்பழகு காரணமாக பல பெண்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. இதனால் பெண்கள் கடும் வலியை அனுபவிக்கிறார்கள். இந்த பிரச்சனையில் மத்திய அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.