புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (07:48 IST)

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் அதிகாரிகள் திடீர் விலகல்: என்ன காரணம்?

Facebook and Whatsapp
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் பணிசெய்த இந்தியாவில் சேர்ந்த உயர் அதிகாரிகள் திடீரென பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
வாட்ஸ் அப் இந்திய பிரிவு தலைமை அதிகாரி அபிஜித் போஸ் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேபோல் பேஸ்புக் இந்தியாவின் பொது கொள்கைப் பிரிவு தலைவர் ராஜீவ் அகர்வால் ராஜினாமா செய்துள்ளார் 
 
தங்களது ராஜினாமா குறித்து இருவரும் விளக்கம் அளிக்கையில் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே விலகி உள்ளதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தளங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த அபிஜித் போஸ் மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகிய இருவரும் பணி விலகியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது 
 
இருப்பினும் அவர்களது சேவை எங்கள் குழுவிற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்தை தொடர்ந்து மேம்படுத்த நாங்கள் முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளது
 
Edited by Siva