1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (15:31 IST)

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் வசதியின்றி டீவி பார்க்கும் வசதி

இண்டர்நெட் வசதியின்றி 20 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் பார்க்கும் வசதியை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்தியிருக்கிறது.


 

 
பொதுவாக இப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. இண்டர்நெட் வசதியுடன் தொலைக்காட்சி சேனல்களையும் நம்மால் அதில் பார்க்கப்படுகிறது. ஆனால் இண்டர்நெட் வதியே இல்லாமல், 20 க்கும் மேற்பட்ட தூர்தர்ஷன் சேனல்களை ஸ்மார்ட்போனில் பார்க்கும் வசதியை மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
 
மற்ற தனியார் தொலைகாட்சி சேனல்களெல்லம் தொழில்நுட்பத்தில் வளர்ந்து விட்டது. ஆனால் தூர்தர்ஷன்  தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ளது. எனவே மற்ற தனியார் சேனல்களுக்கு ஈடு கொடுப்பதற்காக இந்த வசதியை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மூலம் எல்லோரிடமும், குறிப்பாக இளைஞர்களிடம் தூர்தர்ஷனை கொண்டு சேர்க்க முடியும் என பிரசார் பாரதி நம்புகிறது.
 
இதுபற்றி கருத்துக்கூறிய பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி ஜவஹர் சிர்கார் “ உலகம் தரைவழி தொடர்புகளிலிருந்து செயற்கைக்கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இப்போது தூர்தர்ஷன் தனது பழைய உள் கட்டமைப்பிலிருந்து விடுபட்டு புதிய தொழில்நுட்பங்களை நோக்கிச்  செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிரசார் பாரதி, அதன் இலக்கை அடைய,  பழைய கட்டமைப்புகளை புதுப்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.