1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (07:42 IST)

வீட்டு வாடகையை யாரும் வாங்க வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வீட்டு வாடகையை யாரும் வாங்க வேண்டாம்
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 
கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு உத்தரவு ஒன்றே வழி என்பதால் மத்திய அரசு வேறு வழியின்றி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் வேலைக்கு செல்லாமல், வருமானம் இன்றி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டு வாடகை கொடுக்க வேண்டிய தேவை கோடிக்கணக்கான மக்களுக்கு உள்ளது. இந்த மாதம் சம்பளம் வருமா? என்ற சந்தேகத்துடன் பலர் இருக்கும்போது, பொதுமக்கள் வீட்டு வாடகையை எப்படி கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இதனை அடுத்து உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன்படி ஊரடங்கு உத்தரவு காலத்தின் போது வீட்டு உரிமையாளர்கள் யாரும் வாடகை வசூலிக்க வேண்டாம் என்றும் வீட்டை காலி செய்யவும் வற்புறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது
 
ஆனால் இந்த அறிவித்தலை வீட்டு உரிமையாளர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியே. அதுமட்டுமின்றி வீட்டு வாடகை வைத்து காலத்தை ஓட்டி வரும் ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகை வாங்காமல் இருந்தால் அவர்களின் நிலையம் திண்டாட்டம் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது