Daily Horoscope
✕

மேற்கு வங்கத்தில் போராடும் மருத்துவர்கள்: உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி..

Written By Siva
Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (09:39 IST)
மேற்குவங்க மாநிலத்தில் இளநிலை மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் 7வது நாளாகவும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் செய்த சில மருத்துவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இளநிலை மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து அதனை நடத்தி வரும் நிலையில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது.
 
இந்த நிலையில் ஏழாவது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்