வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (21:13 IST)

பேச்சுவார்த்தையை புறக்கணித்த மருத்துவர்கள்.! பதவி விலக தயார்..! மம்தா பானர்ஜி அதிரடி..!!

Mamtha Banerji
மக்கள் நலனுக்காக மேற்கு வங்க முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.   
 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ மனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், முதல்வர் பதவியில் இருந்து மம்தா விலக கோரியும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டு அவர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

Mamtha
மருத்துவர்கள் புறக்கணிப்பு:

அதன்படி இன்று நடைபெற இருந்த பேச்சு வார்த்தைக்கு மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்த நிலையில்,  மருத்துவர்கள் குழு முன் வரவில்லை.  இதையடுத்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என்றும் மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும் மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியிலிருந்து விலக தயார் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கும் , எனக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.