1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (11:48 IST)

ஆபரேஷன் போது சண்டை போட்ட மருத்துவர்கள் ; பிறந்த குழந்தை பலி (வீடியோ)

ஆபரேஷன் போது சண்டை போட்ட மருத்துவர்கள் ; பிறந்த குழந்தை பலி (வீடியோ)
அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, பிறந்த குழந்தை இறந்த சம்பவம் ஜோத்பூரில் நடந்துள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைட் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, இரு மருத்துவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்தனர்.
 
முடிவில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.  
 
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதனால், அறுவை சிகிச்சையின் போது சண்டை போட்ட மருத்துவர்களே குழந்தையின் இறப்பிற்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் அந்த இரு மருத்துவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.