வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (13:19 IST)

6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த டாக்டர் கைது

6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த டாக்டர் கைது

மகாராஷ்டிராவில் 6 பேரை கடத்திக் கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த டாக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 


மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் டாக்டர்.சந்தோஷ் பால். இதற்கு காரணம் என்னவென்றால் சந்தோஷ் பால் 5 பெண்கள் உள்பட 6 பேரை கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார் என்பது தான். இதையடுத்து சந்தோஷ் பால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மங்கள் ஜுதே என்ற பெண் புனேவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சதாரா பகுதியில் உள்ள வய் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அவர் பேருந்து ஏறவில்லை. மாறாக அதன் பின்னர் அவர் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், போலீஸார் மங்க ஜுதேவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மங்கள் ஜுதேவின் செல்போன் செயல்பாடுகளை தீவிரமாக போலீஸார் கண்காணித்தனர். அப்போது, டாக்டர்.சந்தோஷ் பாலின் வீட்டில் இருந்து தான் அந்த செல்போன் சிக்னல் வருகிறது என்பதை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக சந்தோஷ் பாலின் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர். பால், மங்கள் ஜுதேவை கடத்தி வீரியம் மிக்க மருந்துகளை கொடுத்து கொலை செய்ததாக நர்ஸ் தெரிவித்தார்.

சந்தோஷ் பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 6 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இதில் கொலை செய்யப்பட்ட சிலர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் மாயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட 5 பெண்கள், 1 ஆண் சடலத்தை அவர் தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.

வீரியம் மிக்க அபாயகரமான மருந்துகளை அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக கொடுத்தது கொலை செய்ததாக சந்தோஷ் பால் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.  ஆனால் எதற்காக அந்த 6 பேரை கொலை செய்தார் என்பது குறித்த தகவல் இல்லை.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்