வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (23:14 IST)

ஸ்மார்ட்போனில் ஆபாச படம் பார்த்தால் இதெல்லாம் காலி!

இந்தியாவை பொருத்தவரையில் ஆபாச படம் பார்ப்பதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் ஏராளமானோர் ஆபாச படங்களை ஆண் பெண் என பாலின வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி பார்த்துவருகின்றனர்.





தொடர்ந்து ஆபாச படங்களை ஸ்மார்ட்போனில் பார்ப்பதால் இண்டர்நெட் டேட்டா காலியாவது மட்டுமின்றி மனமும் ஆபாசமாக நாளடைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒருசில ஆபாச இணையதளங்களுக்குச் செல்லும்போது, திடீரென ஏதேனும் ஒரு ஆப் உங்களது ஸ்மார்ட்ஃபோனில் தன்னிச்சையாகவே இன்ஸ்டால் ஆகிவிடும் என்றும் அதன் காரணமாக உங்களது நெட் பேங்கிங், பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவர்த்தனை சேவைகளை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து, தகவல்களை திருடிவிடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் ஸ்மார்ட்போனில் ஒளித்துவைத்துள்ள அந்தரங்க புகைப்படங்கள் வரை ஹேக்கர்களால் ஊடுருவ முடியும் என்றும் பல முக்கிய பிரபலங்கள் இப்படித்தான் சிக்கித் தவிப்பதாகவும் நிபுணர்க எச்சரித்துள்ளனர். எனவே ஸ்மார்ட்போனில் ஆபாச படம் பார்த்தால் நீங்கள் பலவற்றை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.