1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (18:41 IST)

அமைச்சர்கள் விடுமுறை எடுக்க வேண்டாம் - பிரதமர் மோடி அறிவுரை

மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு அண்மையில்  ( இலாகா) துறைகள் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடந்து நாட்டின் 17வது மக்களவைத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று தனது அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கினார்.
மோடியின் மத்திய அமைச்சரவையில் 57 மந்திரிகள், 24 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர்களாக 9 பேரும், ராஜாங்க அமைச்சர்களாக 24 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
 
இதனையடுத்து சில முக்கியமான முடிவுகளை மோடி வேகவேகமாக அதிரடியாக எடுத்துவருகிறார். 
 
இந்நிலையில் மோடி சில முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
 
அதில் மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.தங்களது பணியைச் சிறப்பாக ஆற்ற வேண்டும். புதிய மந்திரிகள் பொறுப்பேற்றதும் வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும் அதில் ஆடம்பரம் வேண்டாம்.
 
அவமரியாதை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.கவனத்துடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.