வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (08:31 IST)

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

Train
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதனால் மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்வார்கள் என்றும் தெரிந்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் பதிவு செய்பவர்கள் தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று ரயில் டிக்கெட்டில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்பு செய்யலாம் என்ற நிலையில் தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி என்ற நிலையில் அதற்கு முந்தைய நாள் சொந்த ஊர் செல்பவர்கள் இன்று நேரடியாகவோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி செயலி அல்லது இணையதளம் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று காலி ஆகிவிடும் என்பதால் முன்கூட்டியே தயாராக முன்பதிவு செய்ய இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்துவிட்ட நிலையில் இன்று தீபாவளிக்கு முந்தைய நாள் சொந்த ஊர் செல்பவர்கள்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva