1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2015 (08:49 IST)

நிலக்கரி சுரங்க முறைகேடு : விஜய் தர்தா வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்.பி. விஜய் தார்தா வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


 
 
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக விஜய் தர்தா எம்.பி. மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை  சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில் வணிக நோக்கத்திற்காக மாஸ்கோ செல்ல விஜய் தார்தா சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால் விஜய் தார்தா வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று சி.பி.ஐ. சார்பில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை  சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது சி.பி.ஐ. சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில்  "எம்.பி.களுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அலுவலக பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். எம்.பி.க்கள் தங்களது சொந்த தேவைகளுக்கு இந்த கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது.
 
மேலும்  சொந்த காரணங்களுக்காக மாஸ்கோ செல்லவிருக்கும் விஜய்தார்தா, எம்.பி.களுக்கான கடவுச்சீட்டை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று சி.பி.ஐ.சார்பில் வாதாடப்பட்டது.
 
பின்னர் விஜய் தார்தா சார்பில் அவரது வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு விஜய்தார்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.