சிறை அதிகாரி அனிதாவுக்கு மாதந்தோறும் ரூ.3 லட்சம் கொடுத்த தினகரன்
சசிகலா பெங்களூர் சிறையில் சகல வசதிகளுடன் இருக்க சிறை கண்காணிப்பாளர் அனிதாவுக்கு தினகரன் மாதந்தோறும் ரூ.3 லட்சம் வஞ்சம் கொடுத்து வந்ததாக சிறை கைதிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் சொகுசாக இருப்பதாக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். உடனே அவரை பணிமாற்றம் செய்தனர். மேலும் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பெங்களூரு சிறையின் கண்காணிப்பாளர் அனிதா தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அனிதாவுக்கு எதிராக பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறைக் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள், சசிகலா சிறையில் சொகுசாக இருக்க தினகரனிடம் இருந்து ரூ3 லட்சம் மாதந்தோறும் லஞ்சம் வாங்கி வருவது நீங்கள்தானே என்று முழக்கம் எழுப்பினர். மேலும் சசிகலா சிறையில் சொகுசாக இருந்ததை மறைத்தது மட்டுமல்லாமல் வீடியொ ஆதாரங்களை அழித்ததும் நீங்கள் தானே என்று அனிதாவுடன் சிறை கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.