புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (09:54 IST)

துணை சபாநாயகரை கீழே தள்ளி விட்ட யானை

அசாமில் துணை சபாநாயகரை யானை கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் துணை சபாநாயகராக இருப்பவர் கிரிபாநாத் மல்லா.  இவர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார். நேற்று இவர் தனது தொகுதியான ராதாபரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
 
அப்போது அவரது ஆதரவாளர்கள் கிரிபாநாத் மல்லாவை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் யானை  உடலை குலுக்கியதில் கிரிபாநாத் மல்லா நிலைதடுமாறி கீழே விழுந்தார். நல்ல வேலையாக அவருக்கு அடி ஏதும் படவில்லை. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.