ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (12:29 IST)

தேர்வு கட்டணம் செலுத்த ஏடிஎம்-இல் பணம் எடுக்க முடியாமல் தற்கொலை செய்த மாணவன்!

தேர்வு கட்டணம் செலுத்த ஏடிஎம்-இல் பணம் எடுக்க முடியாமல் தற்கொலை செய்த மாணவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவன் ஒருவன் தேர்வு கட்டணம் செலுத்த மூன்று நாட்களாக ஏடிஎம்-இல் வரிசையில் நின்று பணம் எடுக்க முடியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.


 
 
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், ஏடிஎம்கள் மூலம் பெறலாம் என அரசு அறிவித்தது. ஆனால் வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் பெற முடியாது, விதிமுறைகள், ஏடிஎம்களில் பணம் இல்லாத, வேலை செய்யாத சூழல் இருந்து வருகிறது.
 
இதனால் மக்கள் அன்றாட செலவுக்கு பணம் எடுக்க பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏராளாமான ஏடிஎம்கள் அடைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இருக்கிற மிகவும் குறைவான சில ஏடிஎம்களில் கூட்டம் அலை மோதுகிறது. கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் போதே அந்த ஏடிஎம் இயந்திரத்திலும் பணம் தீர்ந்துவிடும் நிலமை.
 
இப்படி பல நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் பொதுமக்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
18 வயதான சுரேஷ் என்ற அந்த மாணவன் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் தேர்வு கட்டணம் செலுத்த பணம் எடுக்க கடந்த ஒரு வாரமாக ஏடிஎம் வாசலில் காத்திருந்தும் பணம் எடுக்க முடியவில்லை.
 
இதனால் மனமுடைந்த மாணவன் சுரேஷ் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட வங்கியின் மீது தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உறவினர்கள் கற்களை வீசி போராட்டம் நடத்தினர்.