1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (22:42 IST)

லட்டு கொடுக்கும் ஏழுமலையானுக்கே அல்வா கொடுத்த மத்திய அரசு

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.




 


அதேபோல் பழைய நோட்டுக்களை புதிய நோட்டாக மாற்ற காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் இனிமேல் பழைய நோட்டை எந்த நிலையிலும் மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி உறுதியாக கூறிவிட்டடு.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்னும் உண்டியலில் பழைய நோட்டுக்கள் காணிக்கையாக வருகின்றன. இந்த நோட்டுக்களை மாற்றித்தரும்படி தேவஸ்தான நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்ட போதும் அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டதாம் ஆர்பிஐ. லட்டு கொடுக்கும் ஏழுமலையான் நிர்வாகிகளுக்கே ரிசர்வ் வங்கி அல்வா கொடுத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.