தாய், தந்தை கொரோனா வார்டில்..! – குழந்தையை எடுத்து வளர்க்கும் டெல்லி போலீஸ்!
டெல்லியில் கொரோனா பாதிப்பால் தாய், தந்தை இருவருமே கொரோனா வார்டில் உள்ள நிலையில் குழந்தையை போலீஸார் பராமரித்து வரும் செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு காரணமாக தாய், தந்தை இருவருமே கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டதால் குழந்தை ஒன்று பராமரிப்பின்றி வீட்டிலேயே இருந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து அந்த 6 மாத குழந்தையை மீட்ட டெல்லி ரேடியோ காலனி போலீஸார் அந்த குழந்தையை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.