கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள்! பறவை காய்ச்சலா? – டெல்லியில் பீதி!
இந்தியாவில் பறவை காய்ச்சல் பல மாநிலங்களில் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் டெல்லியில் காகங்கள் கொத்து கொத்தாக செத்து விழும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக ஏற்கனவே மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பரவ தொடங்கியுள்ள பறவை காய்ச்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் கண்டறியப்பட்ட பறவை காய்ச்சல் தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் பரவியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று டெல்லியின் பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த காகங்களை பரிசோதனை செய்ய பறவை காய்ச்சல் சோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.