புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (14:56 IST)

செக் மோசடி வழக்கு : விஜய் மல்லையாவிற்கு மேலும் ஒரு பிடிவாரண்ட்

செக் மோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கியுள்ள ‘மதுபான ஆலை முதலாளி’ விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டார். இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 
 
இவற்றில் ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மல்லையா மீது, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 
 
இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, அவருக்கு மார்ச் 18, ஏப்ரல் 2, 9 என மூன்று முறை வாய்ப்பு அளித்தது. ஆனால் கடைசிவரை அவர் ஆஜராகவில்லை.
 
மேலும், பல நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா அளித்திருந்த காசோலைகள் அவரது வங்கி கணக்குகளில் போதிய பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டன. இது தொடர்பக அவர்மீது பல்வேரு செக் மோசடி வழக்குகள், டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அவ்வரின் வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், விஜய்மல்லையாவுக்கு எதிராக, ஜாமினில் வெளிவரமுடியாத கைது உத்தரவை பிறப்பித்து  உத்தரவிட்டுள்ளது.