மனைவி அனுமதி இல்லாமல் உறவு கொள்வது குற்றமா? – குழப்பமடைந்த நீதிமன்றம்!
மனைவி அனுமதி இல்லாமல் அவரை பாலியல் உறவுக்கு உட்படுத்துவது குற்றமா என்ற வழக்கில் டெல்லி நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகளை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு சட்டப்பிரிவுகள் இருந்தாலும் பல்வேறு குற்ற சூழல்களில் அது குற்றமா? இல்லையா? என்பதே குழப்பத்திற்கு உரியதாகி விடுகிறது.
முக்கியமாக குடும்ப வன்முறை குறித்த வழக்குகள் இதுபோன்ற இடர்பாடுகளை சந்திக்கின்றன. சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில், மனைவி விருப்பம் இல்லாமல் அவரை பாலியல் உறவுக்கு உட்படுத்தினால் அது குற்றமா? இல்லையா? என்பது குறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் இருவேறு நீதிபதிகள் இருவேறுவிதமான தீர்ப்பை சொன்னதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.