1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (18:20 IST)

குரங்குகள் தொல்லையால் பிரதமருக்கு கடிதம் எழுதிய எய்ம்ஸ் மருத்துவர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பதால் நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


 

 
டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
மருத்துவமனையில் உலாவும் குரங்குகளால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குரங்குகள் பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவுகளை பறித்துவிடுகின்றன. நோயாளிகளை குரங்குகள் கடித்துவிட்டு ஓடிவிடுகின்றன. இதனால் நோயாளிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தெரு நாய்களின் தொல்லைகளும் அதிக அளவில் உள்ளன. 
 
குரங்குகள் மற்றும் நாய்களின் தொல்லையால் பார்வையாளர்கள் நோயாளிகளை பார்க்க மருத்துவமனைக்கு வர அச்சப்படுகின்றனர். இதனை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் மருத்துவர்கள் பிரதமர் மோடியை நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தியுள்ளனர்.