Daily Horoscope
✕

அரபிக் கடலில் உருவானது ’நிசர்கா’: நாளை தீவிரமாகும்!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 2 ஜூன் 2020 (15:40 IST)
அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நிசர்கா புயலாக வலுபெற்றுள்ளது. 
 
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாம்.  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால்,  நிசர்கா என்று அழைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  
 
இந்நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நிசர்கா புயலாக வலுபெற்றுள்ளது. வடக்கு திசையில் 11 கிமீ வேகத்தில் நகரும் நிசர்கா, தீவிர புயலாகி நாளை பிற்பகலில் மகாராஷ்டிரா - குஜராத் இடையே கரையை கடக்கிறது.  புயல் கடக்கும் போது 95 - 105 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்., கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments