செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 அக்டோபர் 2017 (15:30 IST)

3 மணி நேரம் மட்டுமே தீபாவளி கொண்டாட்டம்: கோர்ட் உத்தரவு!!

தீபாவளி பண்டிகைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சண்டிகர் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


 
 
தீபாவளி பண்டிகை என்றதும் பலருக்கு நினைவில் வருவது பட்டாசுகள் மட்டுமே. இந்நிலையில், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து. 
 
இதேபோல, பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச பகுதிகளிலும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
 
விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளின் படி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 
பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகின்றனரா? என்பதை தீவிரமாக கண்காணிக்க போலீசாருக்கும் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.