வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2016 (12:04 IST)

இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் நாடுகள்!!

வர்தா புயலானது தற்போது சென்னையில் இருந்து 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 
 
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வார்தா புயல் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் கரையை கடக்க உள்ளது.
 
சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த புயலுக்கு வர்தா என்ற பெயரினை பாகிஸ்தான் பெயர் வைத்துள்ளது. வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம். 
 
இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் பெயரினை தீர்மானம் செய்கின்றன. 
 
கடைசியாக சென்னையை தாக்கிய நாடா புயலுக்கு ஓமன் நாடு பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.