புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (12:39 IST)

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: கை கொடுக்காத ஊரடங்கு!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது. 
 
உலகெங்கும் 4,00,000 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 20000 பேர் வரை இறக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு 609 லிருந்து 649 ஆக அதிகரித்துள்ளது. 
 
உயிரிழப்பை பொருத்தவ்ரை 12 ஆகவும் உள்ளது. இந்நிலையில் மேலும் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்கும் வண்ணம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு தொற்று பரவமால் இருக்க கைக்கொடுப்பதாய் தெரியவில்லை. 
 
மேலும், உலகமெங்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஊரடங்கினால் மட்டும் கொரோனாவை அழித்துவிட முடியாது என கூறியுள்ளார். 
 
அதோடு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரவல் எனும் மூன்றாவது கட்டத்தை இன்னும் எட்டவில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.