இந்தியாவில் 24 மணி நேரத்தில் 19,556 பேருக்கு கொரோனா !!
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
ஆம், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,556 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,75,116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,111 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,36,487 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,376 பேர் குணமடைந்துள்ளதாகவும், 301 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.