1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:12 IST)

பூஸ்டர் டோஸாக கார்பிவேக்ஸ் தடுப்பூசி – மத்திய அரசு!

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


நாட்டில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல அதிகரித்துள்ள நிலையில் கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. முதல் இரண்டு டோஸ் போட்டு முடித்ததும் அடுத்து பூஸ்டர் டோஸ் போட வேண்டும்.

கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தி கொள்கின்றனர். ஆனால், தற்போது கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் கார்பிவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதலும் அளித்துள்ளது.

இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிந்துரையில் இருந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவிட் நோய்க்கு எதிரான முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் மருந்திலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் நாட்டில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.