மத்திய அரசே, இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி ட்வீட்

rahul
மத்திய அரசே, இந்த செய்தி உங்களுக்குத்தான்’
siva| Last Updated: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (10:55 IST)

மத்திய அரசை இந்த செய்தி உங்களுக்கு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.25 லட்சத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி உங்களுக்கு தான் என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கொரோனா பாதிப்பு உடலில் ஆக்சிஜன் அளவை குறைக்கும் ஆனால் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் போதிய அளவு அரிசியை படுக்கைகள் இல்லாதது பல உயிரிழப்பை ஏற்படுத்தும் மத்திய அரசை இந்த செய்தி உங்களுக்கு தான் என பதிவு செய்துள்ளார் இந்த டுவிட்டர் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :