புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (08:23 IST)

பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னணி: ஆட்சியை தக்க வைக்கின்றதா?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கிய நிலையில் தபால் ஓட்டுக்களின் அடிப்படையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் மற்ற ஓட்டுக்களும் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்ட தகவலின்படி காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் ஆட்சியை தக்க வைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
 
சற்றுமுன் வெளியான தேர்தல் முடிவுகள் குறித்த தகவலின்படி 60 இடங்களுக்கான முன்னிலை விபரம் வெளிவந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது. முதல்கட்ட முன்னிலையில் பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.